போதை தடுப்பு விழிப்புணர்வு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவ மாணவிகள் சார்பில் ஆண்டிபட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லூரி குழுமத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் இசக்கிமுத்து, மாரிமுத்து, லலித் ஆகியோர் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

போதை பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.

ஆண்டிபட்டி டி.எஸ்.பி., அலுவலகம் அருகே துவங்கிய ஊர்வலம் சக்கம்பட்டியில் முடிந்தது.

ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காசுமாயன், என்.எஸ்., திட்ட அலுவலர் ராஜேஷ் செய்திருந்தனர்.

Advertisement