பைப் லைன் உடைப்பு குடிநீர் வீணாகும் அவலம்

புதுச்சத்திரம்: கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வழிந்தோடும் நிலை உள்ளது.

புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் - பெரியகுமட்டி இடையே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் செல்கிறது.

இதிலிருந்து வரும் தண்ணீரை இப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சேந்திரக்கிள்ளை நான்கு முனைசாலை அருகே, இந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், தண்ணீர் அருகில் உள்ள மணிலா வயலில் வழிந்தோடி வீணாகும் அவல நிலை உள்ளது.

எனவே, உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement