போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில், ரெட்டிச்சாவடி காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

இதில், மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement