தண்டவாளத்தில் ஆண் பிரேதம்
தண்டவாளத்தில் ஆண் பிரேதம்
கரூர் : கரூரில் இருந்து, வீராக்கியம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து, மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்துார் வரை செல்லும், விரைவு ரயிலின் லோகோ பைலட் நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு தகவல் அளித்தார். உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கரூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்
-
விசித்திர சம்பவங்களால் பேய் பீதியில் கிராம மக்கள்
-
நகல் கிழிப்பு போராட்டம்
-
புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு துறையில் மெகா... குளறுபடி; வினாத்தாள் மாறியதால் மொழிப்பாட தேர்வு ரத்து
-
எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக தேர்ச்சி விகிதம் கோலார் கல்வி துறைக்கு பெரும் சவால்
-
8 வயது மாணவி பலாத்காரம் வாலிபர், பள்ளி மேலாளர் கைது
Advertisement
Advertisement