விசித்திர சம்பவங்களால் பேய் பீதியில் கிராம மக்கள்
தட்சிணகன்னடா: மாலாடி கிராமத்தில், குடும்பம் ஒன்று விசித்திரமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்த வீட்டில் நடக்கும் வினோதமான சம்பவங்கள், கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
தட்சிணகன்னடா, பெல்தங்கடியில் மாலாடி கிராமம் உள்ளது. இங்கு உமேஷ் ஷெட்டி, தன் குடும்பத்துடன் வசிக்கிறார். சமீப நாட்களாக இவர்களின் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன.
மேலே இருக்கும் பாத்திரங்கள், தானாகவே கீழே விழுகின்றன. அணிந்திருக்கும் உடையில் திடீர் என, தீப்பிடிக்கிறது, இரவு உறக்கத்தில் யாரோ கழுத்தை நெரிப்பது போன்றாகிறது. வீட்டில் யாரோ அங்கும், இங்கும் நடமாடுவதை உணர முடிகிறது. இது போன்ற சம்பவங்களால் குடும்பத்தினர் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர்.
இந்த வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளது. அதுதான் தங்களை வாட்டி வதைப்பதாக உமேஷ் ஷெட்டி குடும்பத்தினர் கூறுகின்றனர். இவர்கள் வீட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டு, கிராமத்தினரும் பீதி அடைந்துள்ளனர். கடவுளை வேண்டி, பரிகாரம் செய்யும்படி ஆலோசனை கூறுகின்றனர்.
இதற்கிடையே, உமேஷ் ஷெட்டியின் மொபைல் போனில், விசித்திரமான உருவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது, கிராமத்தினரின் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. உமேஷ் ஷெட்டி வீட்டை காலி செய்யவும் தயாராவதாக கூறப்படுகிறது.