ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்

தாவணகெரே: வெறும் 99 ரூபாய் கடன் பாக்கிக்காக, 58,000 ரூபாய் கேட்டு மைக்ரோ நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் மைக்ரோ நிதி நிறுவனங்களின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு கடிவாளம் போட அரசு சட்டம் வகுத்துள்ளது. துணை முதல்வர் சிவகுமாரும் மைக்ரோ நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிறுவனங்கள் பணிந்ததாக தெரியவில்லை. கடனை வசூலிக்கும் பெயரில் இம்சிக்கின்றனர்.

தாவணகெரேயில் வசிப்பவர் சந்திரசேகர். இவர், ஆன்லைன் வழியாக மைக்ரோ நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். மாதந்தோறும் கடன் தவணையை சரியாக கட்டினார். கடைசியாக 99 ரூபாய் பாக்கி இருந்தது. இதைப் பெற்று கொண்டு, 'கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்' தரும்படி கேட்டார்.

ஆனால் நிறுவனத்தினர், 58,000 ரூபாய் கட்டும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை பார்த்து சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். நிறுவனத்தின் அராஜகம் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுத, அவர் முடிவு செய்துள்ளார்.

Advertisement