சீரமைக்கப்படாத உயர்கோபுர மின்விளக்கு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848781.jpg?width=1000&height=625)
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரியநாகபூண்டியில் அமைந்துள்ளது நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில். ராகு பரிகார தலமான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து, சித்துார் செல்லும் மாநில நெடுங்சாலையில், சின்னநாகபூண்டியில் இருந்து பெரியநாகபூண்டி நாகேஸ்வரர் கோவிலுக்கு இணைப்பு சாலை வசதி உள்ளது.
இந்த இணைப்பு சாலை முகப்பில், கோவில் கோபுர அலங்கார வளைவும் அதையொட்டி உயர்கோபுர மின்விளக்கும், கோவிலுக்கான அடையாளமாக அமைந்துள்ளன.
இங்கு பேருந்து மற்றும் ஆட்டோவில் வந்து இறங்கும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு, ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இங்கு வந்து இறங்கும் பயணியர் மற்றும் பக்தர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது.
பாதுகாப்பு கருதி, இந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.