பெண் மயங்கி விழுந்து சாவு
கடலுார்: புதுச்சேரி, பி.எஸ்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பரமதேவி,38; இவர், தனது மகனின் திருமண பத்திரிக்கையை, உறவினர்களுக்கு கொடுக்க, கிளிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு சென்றார். அங்கு, திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், பரமதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement