குட்கா விற்பனை; 5 பேர் கைது
பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியில் கடைகளில் குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் மூவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். கிழக்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 180 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் சாமிநாதன் மனைவி சுதா, 37, என்பவரை கைது செய்தனர்.
இதேபோன்று, மேற்கு மெயின்ரோடு பகுதியில் ஹான்ஸ் விற்ற சரவணன் மனைவி காமாட்சி, 40, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1,141 பாக்கெட்டுகளும், வடகரையில் சின்னதுரை, 55, என்பவரது பெட்டிக்கடையில் 18 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும், பெட்டிக்கடைகளுக்கு ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பாக்கெட்டுகள் விற்ற பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை அய்யப்பன், 25, கொசப்பள்ளம் ஹரி மகன் முத்து, 24, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.