மூதாட்டி பலி

திட்டக்குடி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மூதாட்டி இறந்தார்.

திட்டக்குடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி கமலம், 67; ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கமலத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர், இறந்தார்.

புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement