விடுதியில் போராட்டம் எதிரொலி ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு: தர்மநல்லுார் அரசு ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக ஆதி திராவிடர் நல அலுவலர் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுார் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு, சுகாதாரமின்றி உணவு வழங்குவதாக கூறி நேற்று முன்தினம் மாணவர்கள் சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் விடுதியில் தங்கி படிக்க பாதுகாப்பு இல்லை எனவும், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

இப்போராட்டம் எதிரொலியாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா நேற்று விடுதியை ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.

மாணவர்கள் தங்கும் அறை, விடுதி வளாகத்தை துாய்மையாக இருக்க வேண்டும் என, விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

விடுதி சுகாதாரமற்ற இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Advertisement