தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு
பழநி:''தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது'' என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் குற்றம் சாட்டினார்.
பழநியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரு பாலருக்கும் சமமான சட்டம் தேவை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதில் நீதிமன்றம் நல்ல முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதில் பழநியில் அதிகமாக உள்ளது.
தி.மு.க., அரசை வெற்றி பெற செய்த அரசு அலுவலர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் இதன் பிரதிபலிப்பு 2026 தேர்தலில் தெரியும். பழநி கிரிவீதியில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்கள், பேட்டரி கார் வசதியும் பாராட்டுக்குரியது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement