அரசு கல்லுாரி பிற்படுத்தப்பட்ட விடுதியில் அதிகாரிகளிடம் மாணவர்கள் சரமாரி புகார் சமையல் பணியாளர்களை மாற்ற வலியுறுத்தல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848799.jpg?width=1000&height=625)
திருத்தணி:திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு வசதியாக, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில், ஒரு காப்பாளர், இரண்டு சமையல் பணியாளர்கள் மற்றும் ஒரு துப்புரவு ஊழியர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களாக காப்பாளர் மற்றும் சமையல் பணியாளர்கள் விடுதிக்கு சரியாக வருவதில்லை, தரமான உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கு வதில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும், சில நாட்களாக சமையல் பணியாளர்கள் சரியாக சமைக்காததால் மாணவர்களே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று காலை, திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் ஆகியோர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை அழைத்து விசாரித்தனர்.
பின், மதிய உணவு வேளையில், மேற்கண்ட மூன்று அதிகாரிகளும் மாணவர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்
அப்போது, தினசரி மதிய உணவு வழங்கும் பட்டியலில் உள்ள படி உணவு, முட்டை, பொரியல் உட்படஅனைத்து பொருட்களும் இருந்தன.
ஆனால், மாணவர்களுக்கு உணவு வழங்க வெறும் 10 தட்டுகள் இருந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, மீண்டும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, மாணவர்கள், எங்களுக்கு தரமான உணவு வழங்குவதில்லை, தினமும், மதிய உணவில் முட்டை வழங்க வேண்டும், ஆனால், இன்று மட்டும் நீங்கள் வந்ததால் முட்டையும், பட்டியல் படி உணவும் தயாரித்துள்ளனர்.
ஆகையால், சமையல் பணியாளர்களை உடனடியாக மாற்ற வேண்டும். விடுதி காப்பாளரும் தினமும் இங்கு தங்கியிருந்து, மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என, சரமாரியாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
மேலும்
-
பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை
-
நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களை கண்காணியுங்க; அவசர வேலையாக வெளியூர் செல்வோர் அவதி
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்
-
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு மழைக்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்
-
பழநி யாத்திரை சுகமானது: நல்ல பலனை தரும்; முன்னாள் நீதிபதி பேச்சு