நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களை கண்காணியுங்க; அவசர வேலையாக வெளியூர் செல்வோர் அவதி

மாவட்டத்தில் பழநியில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பழநியில் தரிசனம் முடித்துவிட்டு செல்லும் பக்தர்கள் பஸ்களில் கோவை, திண்டுக்கல், மதுரை, தாராபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்பவர்களை முதலில் பஸ்களில் ஏற அனுமதிக்கின்றனர்.


இடையில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்லும் பயணிகளை கடைசியாக ஏற அனுமதிப்பதால் பஸ்சில் நின்றபடி பயணிப்பதை தவிர்த்து புறநகர் பஸ்களில் செல்கின்றனர்.


சில தனியார் பஸ்கள் முக்கிய நகரங்களுக்கு செல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவதால் இடையில் உள்ள நகரங்களை தவிர்த்து செல்கின்றன.


இதனால் அந்த ஊர்களுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலர் குழுவாக இணைந்து தனியார் வாகனங்களை வாடகைக்கு பிடித்து அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் உடல் நலக்குறைவால் பழநி வரும் பஸ்களில் ஏறஇடையில் நிறுத்துகின்றனர்.


தனியார் ,அரசு பஸ் ஓட்டுநர்கள் பக்தர்களை ஏற்றி பழநி வந்து இறக்கி விடுகின்றனர்.

இதே போல பழநியில் இருந்து பாதயாத்திரையாக வந்து திரும்பிச் செல்லும் பக்தர்களுக்கு பஸ் கண்டக்டர்கள் டிரைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

Advertisement