பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை

வடமதுரை : வடமதுரை தும்மலக்குண்டு அரசு துவக்கப் பள்ளியில் பொதுமக்கள் சார்பில் சீர் வழங்கும் விழா, நுாற்றாண்டு திருவிழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, ஊர் நாட்டாண்மை பன்னீர்செல்வம், கவுன்சிலர் கவிதாசரவணன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியை சவுடீஸ்வரி வரவேற்றார். உதவி ஆசிரியர் பூங்கோதை ஆண்டறிக்கை வாசித்தார். ஊர் மக்கள் சார்பில் 4 ஜோடி பென்ச் டெஸ்க், கடிகாரம், தலைவர்கள் படங்கள், நினைவு பரிசுகளை ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

Advertisement