அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு ராமேஸ்வரத்துக்கு இயக்க முன்னேற்பாடு
பொள்ளாச்சி:திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதையடுத்து, ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி, பழநி வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். பாம்பன் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றதால் கோரிக்கை நிலுவையில் இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக சென்னை - ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கும் ரயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் இருக்கும் வகையில் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலில், 22 ரயில் பெட்டிகள் இருந்தன. தற்போது, ஒரு ஏசி முதல் வகுப்பு, ஒரு ஏசி இரண்டு டயர் கோச், ஏசி மூன்று டயர் கோச், 13 சிலிப்பர் கிளாஸ் கோச், மூன்று பொது இரண்டாம் வகுப்பு, இரண்டு இரண்டாம் வகுப்பு கோச் என மொத்தம், 23 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிப். 10ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் இருந்தும், 11ம் தேதி முதல் மதுரையில் இருந்தும் பயன்பாட்டுக்கு வரும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே போன்று, ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் பெட்டி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரத்துக்கு விரைவில் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், ராமேஸ்வரம் - சென்னை ரயில் பெட்டிகள் ஒரே மாதிரியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பின், ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்குவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கலாம் என கருதுகிறோம். விரைவில் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.
மேலும்
-
பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை
-
நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களை கண்காணியுங்க; அவசர வேலையாக வெளியூர் செல்வோர் அவதி
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்
-
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு மழைக்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்
-
பழநி யாத்திரை சுகமானது: நல்ல பலனை தரும்; முன்னாள் நீதிபதி பேச்சு