தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு துரோகம்
சென்னை:'ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், பயிர்க்கடனை ரத்து செய்யாமல், தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஏழை மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, எந்த கவலையும் இல்லாமல், தி.மு.க., அரசு உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து, முதல்வரும், அமைச்சர்களும், ஆளுக்கொரு சதவீதத்தைக் கூறுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு என, மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்ததும், விவசாயக் கடன் தள்ளுபடிக்கு முதல் கையெழுத்து போடப்படும் என, ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று வரை, பயிர்க்கடனை ரத்து செய்யாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்துபோன விவசாயிகளின் வயிற்றில், தி.மு.க., அடித்திருக்கிறது.
உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.,வின், கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்
-
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு மழைக்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்
-
பழநி யாத்திரை சுகமானது: நல்ல பலனை தரும்; முன்னாள் நீதிபதி பேச்சு
-
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை! முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு
-
விழிப்புணர்வு