பள்ளி உணவில் கிடந்த பல்லி
நீடாமங்கலம்:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ - மாணவியருக்கு நேற்று காலை, பொங்கல் மற்றும் சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது.
உணவில், பல்லி இறந்து கிடந்ததை தலைமை ஆசிரியர் பார்த்து, மாணவர்கள் சாப்பிடுவதை தடுத்து, சாப்பிட்ட அனைவரையும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
மாணவர்கள் சாப்பிடத் துவங்கிய உடன் பல்லி இறந்து கிடந்ததை பார்த்ததால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், மாலையில் வீடு திரும்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement