மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தொல்லை  கொடுத்தவர் கைது

தஞ்சாவூர்:மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே கரந்தை, மிளகுமாரி செட்டித் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 42; தனியார் நிதி நிறுவன கடன் வசூல் பிரிவு ஊழியர்.திருவையாறு பகுதியில் வசூல் பணிக்கு சென்றார். 18 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் வசூல் செய்ய கடந்த நவம்பரில் சென்ற சண்முகம், அப்போது வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட பெண் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார். இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர், திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். சண்முகத்தை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement