கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு வீடு அதிகாரிகள் இடித்து அகற்றம்

செங்கம்,:செங்கத்தில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அறநிலையத்துறையினர் இடித்து அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் செய்யாற்றங்கரையிலுள்ள துர்கையம்மன் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஆக்கிரமித்து, தனி நபர் சிலர், வீடு கட்டி வசித்து வந்தனர்.

இந்த வீட்டை காலி செய்ய அறநிலையத்துறை, பல முறை நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் வீட்டை காலி செய்யாததால், நேற்று, போலீஸ் பாதுகாப்புடன், அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீட்டை இடித்து அகற்றினர்.

Advertisement