வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது

கோவை; கோவை, வேளாண் பல்கலை, தாவரவியல் பூங்காவில் 5 நாள் மலர்க் கண்காட்சி நாளை துவங்குகிறது.

வேளாண் பல்கலை, தோட்டக்கலைத் துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் 7வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. லட்சக் கணக்கான மலர்களைக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களில் பார்வையாளர்ளைக் கவரும் விதத்தில் பூக்கள் அலங்கார வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வண்ண வண்ண மலர்களின் அணிவரிசைகள், அலங்கார வளைவுகள், விலங்குகளின் வடிவங்கள் என, பெரியவர்கள், குழந்தைகள் அனைவரையும் கவரும் விதத்தில் பூக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் செந்தில்பாலாஜி, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத் துறை சார்பில், உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement