சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!

1

புதுடில்லி: 'நிலவிலிருந்து மண்ணை எடுத்து வர, 2027ம் ஆண்டு சந்திரயான்-4 விண்ணில் ஏவப்படும்' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி துறையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விண்கலம், எல்.வி.எம்.பி., ராக்கெட் மூலம் அனுப்பப்படும். 2027ம் ஆண்டு சந்திரயான்-4 விண்ணில் ஏவப்படும். நிலவில் மேற்பரப்பில் இருந்து பாறை துகள்கள், பூமிக்கு எடுத்து வரப்பட்டு ஆய்வு செய்யப்படும்.


2026ம் ஆண்டு ககன்யான் திட்டம் மேற்கொள்ளப்படும். இந்திய வீரர்கள் விண்கலம் மூலம் பூமி சுற்றுவட்ட பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பூமி திரும்புவர். அதற்கு முன் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தில் ரோபோ அனுப்பி சோதனை மேற்கொள்ளப் படும். மிகப்பெரிய ராக்கெட்களை ஏவும் வகையில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.


சிறிய ரக செயற்கைக் கோள்கள் ஏவுவதற்கு தூத்துக்குடியில் புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டில் 44 பில்லியன் டாலராக உயரும். சர்வதேச முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement