முறைகேடு நிறுவனங்கள் சிக்கின

திருப்பூர்; சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீர் ஓடியது தொடர்பாக, திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர் பகுதியில் ஆய்வு நடத்தினர். இதில், வாரிய அனுமதி பெறாமலும், சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றிவந்த ஒரு பிரின்டிங் நிறுவனம் சிக்கியது.

நேற்று நடத்திய ஆய்வில், அதே பகுதியில் மற்றொரு முறைகேடு பிரின்டிங் நிறுவனம் சிக்கியது. இரு நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டருக்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement