ரயில்வே ஸ்டேஷனில் கட்டுமான பணி முடியுமா?

திருப்பூர்; ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் நுழைவு வாயில் முகப்பு அருகே கட்டுமான பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. ஸ்டேஷனில் அநேக இடங்களில் கட்டுமான பணி துவங்கி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. குமரன் நினைவிடம் அருகே நுழைவு வாயில் அமைக்கும் போதே, இரண்டாவது பிளாட்பார்ம் அவிநாசி ரோடு பாதையில் இருந்து பயணிகள் உள்ளே வர நுழைவு வாயில் அமைக்கும் பணி துவங்கியது.

முதல் பிளாட்பார்மில் பணி முடிந்து முடிவுறும் நிலையில், இரண்டாவது பிளாட்பார்ம் பணி மந்தமாக நடக்கிறது. நடப்பாண்டு ஏப்., மாத இறுதிக்குள், 70 சதவீத பணிகளை முடித்து ஒரு பகுதிக்கான திறப்பு விழாவை முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இச்சூழலில் பணி தாமதமாகியுள்ளதால், குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுமான பணி முடிக்கப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement