ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றுவது அவசியம்: உ.உ.க.,

பல்லடம்; பல்லடம், கோடங்கிபாளையம் உழவாலயம் அரங்கில், நாராயணசாமி நாயுடு நுாற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. உழவர் உழைப்பாளர் கட்சி செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில மகளிர் அணி தலைவி ராஜரீகா, மாவட்ட தலைவர்கள் பொன்னுசாமி, மகுடேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

உ.உ.க., மாநில தலைவர் செல்லமுத்து பேசியதாவது:

கோவை - குருடம்பாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர் வைக்கப்படுவதுடன், அவரது நினைவாக ஒரு நினைவு வளைவு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல், ஆனைமலை - -நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாராயணசாமி நாயுடு படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர்கள் பொன்னுசாமி, வெங்கடாசலம், மகாலிங்கம், ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement