மா.கம்யூ.,வுக்கு புதிய மாவட்ட செயலாளர்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமையில் நடந்தது.

மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக, அவர் திருப்பூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுபட்டார். திருப்பூர் மாவட்ட செயலாளராக மூர்த்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினராக கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினராக பிரவீன்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement