குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பு

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் ஊராட்சி, சி.எஸ்.ஐ., காலனியில் இருந்து, மல்ல சமுத்திரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. அதில், பலர் குப்பையை கொட்டி வருகின்றனர்.

நேற்று மாலை திடீரென அந்த குப்பையில் தீ பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. மளமளவென்று எரிந்த தீ அருகிலுள்ள குடியிருப்பு பகுதி வரை பரவ துவங்கியது. அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவிநாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Advertisement