உணவு உட்கொண்ட மாணவியருக்கு பாதிப்பு
கோவை; விடுதியில் உணவு உட்கொண்ட பாரதியார் பல்கலை மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கோவை பாரதியார் பல்கலையின், மாணவியருக்கான பெரியார் விடுதியில், நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது. இதை உட்கொண்ட, 22 மாணவியருக்கு, மாலை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, கல்வீரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சிசிச்சைக்கு பின், 20 பேர் விடுதி திரும்பினர். இரு மாணவியர், கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் விடுதி திரும்பினர். இதுகுறித்து பல்கலை நிர்வாகத்தினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement