பழநி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள்

1

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் அவர்களே சமைத்து அன்னதானம் வழங்கினர்.

பழநி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வரத்தொடங்கியுள்ளனர். இவர்கள் நெடுந்துாரம் நடந்து வருவதால் பல தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் திண்டுக்கல் வழியாக பழநி செல்லும் ரோட்டோரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களும் அதை ஆர்வமாக வாங்கி
சாப்பிடுகின்றனர்.


இன்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் பக்தர்களுக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் வைத்து அன்னதான உணவுகளை சமைக்க தொடங்கினர். மதியம் 1:30 மணிக்கு உணவுகள் தயாரானதும் மாநகராட்சி பின்புறம் உள்ள வாசல் வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் இளமதி தொடங்கி வைத்தார். 200க்கு மேலான பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

Advertisement