பைனலில் ராம்குமார்-மைனேனி: சென்னை ஓபனில் அபாரம்
சென்னை: சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் பைனலுக்கு இந்தியாவின் ராம்குமார், மைனேனி ஜோடி முன்னேறியது.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, சீனதைபேயின் ரே ஹோ, ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்கொண்டது.
அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி, ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகி, கைடோ உசுகி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 4-6 என இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் ஏமாற்றிய இந்திய ஜோடி 6-10 எனக் கோட்டைவிட்டது. முடிவில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6-4, 4-6, 6-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.