விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம்

புதுச்சத்திரம்,: பூவாலை ஊராட்சியில் வேளாண் துறை சார்பில், விவசாயிகளின் அடுக்கு தரவு சேகரிப்பு முகாம் நடந்தது.

பரங்கிப்பேட்டை வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது, எந்த பகுதியில் உள்ளது, சர்வே எண், உட்பிரிவு எண் உள்ளிட்ட அடுக்கு தரவுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சத்திரம் அடுத்த பூவாலை ஊராட்சியில் நேற்று நடந்த முகாமில், வேளாண் அலுவலர் வீரமணி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர், உதவி வேளாண் அலுவலர்கள் மணிவாசகம், பிரபு, சி.ஆர்.பி., உறுப்பினர் கார்த்திகா உள்ளிட்டோர் விவசாயிகளின் ஆதார் எண், கணினி சிட்டா, ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண் ஆகிய தரவுகளை சேகரித்து ஆன் லைனில் பதிவேற்றம் செய்தனர்.

Advertisement