கல்விக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதில் ஆர்வம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பிப்.,10 வரை நடக்கும் புத்தக திருவிழாவில், பல்வேறு பதிப்பகங்கள், ஆயிரகணக்கான தலைப்பில், லட்ச கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இலக்கியம், நாவல், வராலாறு, சமகால அரசியல், அறிவியல், கணிதம், தொழில் நுட்பம் என, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் முக்கியமான புத்தகங்கள் உள்ளன.

வாசகர்கள் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, விளையாட்டு முறையில், கல்வி உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்றுத்தரும் கல்விக்கு பெற்றோர் மற்றும் வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

---

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா

நம்ம ஊரு மூலிகைகள்

டோல் ப்ரீ: 18004257700

ஆசிரியர்: அண்ணாமலை சுகுமாரன் பக்கம் : 252, விலை: ரூ.320

மருத்துவ மூலிகைகளை, நம் முன்னோர்கள் நம் இருப்பிடம் சுற்றி வளருமாறு எப்படி அமைத்திருக்கின்றனர் போன்ற விபரங்கள் உள்ளன.

18 வகை நஞ்சை நீக்கும் அவுரி, பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் நாவல், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் திருநீற்றுப் பச்சிலை உள்ளிட்ட மூலிகைகள் குறித்து தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

---

இந்து சமய வாழ்வியல் சனாதன தர்மம்

டோல் ப்ரீ: 18004257700

ஆசிரியர்: இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்

பக்கம்: 160, விலை: ரூ.230

மனிதனின் விலங்கு குணங்களை அகற்றி, சமைத்த உணவைப்போல் அன்பை போதிப்பதே சமயம். அதற்கு சத்தியம் தவறாத நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என, வழிகாட்டுவதே சனாதன தர்மம்.

அது சடங்கல்ல; வாழ்வியல் நெறி என்பதை புரிய வைக்கும் நுால்.

----------------

இந்த புத்தக கண்காட்சிக்கு, விசூரைச்சேர்ந்த அரசு பள்ளி மாணவ-- மாணவியரை அழைத்து வந்தேன். இங்குள்ள புத்தகங்கள் சிறுவர்கள், வாலிபர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. குறிப்பாக, கல்வி உபகரணங்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுக்கப்படும் கல்விக்கு முக்கியத்தும் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

- -ஏ.மூர்த்தி, விசூர்.

--புத்தக கண்காட்சியில், சரித்திர நுால்கள், அறிஞர்களின் நுால்கள், அறிவியல், மருத்துவம் சார்ந்த பதிவுகளை நிறைய பார்க்க முடிகிறது. இன்றைக்கு தேடி பிடிக்க வேண்டிய சிறந்த நுால்களில், மருத்துவ குறிப்புகளை அதிகம் இடம் பெறுகிறது. ஆரோக்கியமும் மேம்படுத்த வாய்ப்பாக உள்ளது.

- -ஆர்.தட்சிணாமூர்த்தி,

அய்யன்பேட்டை, காஞ்சிபுரம்.

Advertisement