பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜை.


பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜைப.


வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர் மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 3ல் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
தினந்தோறும் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு கபிலர்மலை முருகன் கோவிலுக்கு படி பூஜை நடந்தது.
மாலை, மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடந்தது. முன்னதாக, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, திருமஞ்சன பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement