மினி பஸ் உரிமையாளர்கள்சம்மேளன மாநில பொதுக்குழு


மினி பஸ் உரிமையாளர்கள்சம்மேளன மாநில பொதுக்குழு


கரூர் : தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சம்மேளன, மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் கொடியரசன் தலைமையில், வெண்ணைமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில் கடந்த, 25 ஆண்டுகளாக மினி பஸ்களை இயக்கி வருபவர்களுக்கு, புதிய உரிமம் தருவதில் முன்னுரிமை வழங்க வேண்டும், மினி பஸ் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் ரஹீம், பொருளாளர் சுப்பிரமணியன், மண்டல பொறுப்பாளர் பழனிவேல், மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement