வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய 'தானே' புயலில் பாதித்த மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதில், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம், சித்திரைசாவடி கிராமங்களில் வழங்கிய நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்த வி.ஏ.ஓ., சம்பத் மீது கடலுார் ஊழல் தடுப்பு வழக்குகள் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு தரப்பில் பாலரேவதி ஆஜரானார். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், வி.ஏ.ஓ., சம்பத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement