தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் அறிவுரைகள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பைத் தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மகப்பேறுவின் போது இறப்பு, குழந்தை இறப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வரும் போது இருந்து பிரசவிக்கும் வரை கண்காணிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து தற்போது கலெக்டர் அலுவலகத்தில் தாய்சேய் நல கண்காணிப்பு மையம் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் தொலைபேசி மூலம் தாய்மார்கள், குழந்தைகள் நலம் குறித்து விசாரித்து தேவையான அறிவுரைகள் வழங்குகின்றனர்.
இந்த மையத்திற்காக 93454 92726, 93454 97705 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்