அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் மண் குவியல், பழைய வாகனங்களால் இடையூறு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் பழைய வாகனங்களை நிறுத்தியும், மண்ணை குவித்து இருப்பதால் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமமப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலக பழைய, புதிய கட்டடம், சப் டிரஷரி அலுவலகம், சப் ஜெயில், அரசு நலத்திட்ட உதவி கட்டடம் உட்பட பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள காலியான இடத்தில் மண்ணை குவித்தும், பழைய வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் தங்கள் டூ வீலர்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசு வாகனங்களுக்கும் இடமில்லாமல் ஆங்காங்கு நிறுத்தப்பட வேண்டியுள்ளது. முதியோர் ஊதிய பிரிவு, சர்வே பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். மண் குவியல், பழைய வாகனங்கள் அலுவலகத்தை மறைத்து இருப்பதால் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

காலாவதியான வாகனங்கள், மண் குவியல்களை அப்புறப்படுத்தி, மக்கள் வந்து செல்லவும், டூவீலர்களை நிறுத்தவும் வசதி செய்ய தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement