ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27ல் டெண்டர் விடப்படுகிறது.
சிவகாசி ரோட்டில் அச்சங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதையில் 4 ஏக்கர் நிலத்தில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.13 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது.
இங்கு 30 பஸ்கள் நிற்கும் வசதி, 2 பெரிய ஓட்டல்கள், 67 கடைகள், டூவீலர்கள் கார்கள் காப்பகம், சுகாதார வளாகம், போதிய குடிநீர், இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது.
தற்போது 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பிப்., 27ல் கடைகள் டெண்டர் விடப்பட்டு, ஏப்., 15க்குள் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் பணிகளை தீவிரமாக்கி வருகிறது.
எம்.எல்.ஏ., ஆய்வு
இந்நிலையில் நேற்று காலை எம்.எல்.ஏ. மான்ராஜ் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நேரடி ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.