கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

அதன் பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தில் கையெழுத்து இயக்க பதாகையில் கலெக்டர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் 1800 4252 650, 155214 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், தொழிலாளர் உதவி ஆணையர்கள் மலர்விழி, குலசேகரன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement