ரெகுநாதபுரம் பள்ளியில் சிறுதானிய உணவு விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது.

கண்காட்சியில் பாரம்பரிய உணவுகளான கருப்பு கவுனி, தினை, சாமை, வரகு, கொள்ளு, ராகி, கம்பு, கேழ்வரகு, சோளம், கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை பயன்படுத்தி இனிப்பு பதார்த்தங்கள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்டவைகளை சமைத்து காட்சிப்படுத்தினர்.

திருப்புல்லாணி வட்டாரக் கல்வி அலுவலர் உஷா விழாவை துவக்கி வைத்தார். ரெகுநாதபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

முன்னாள் துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ், திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., ரஞ்சித் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் தங்கரத்தின மலர் வரவேற்றார்.

விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வித்யா, சிக்கந்தரம்மா, சஹனாஸ், கார்த்திகா, தாட்சாயணி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறுதானிய உணவு வகைகள் சுவைப்பதற்கு வழங்கப்பட்டது.

Advertisement