சங்க செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ைஹதர் அலி தலைமை வகித்தார். சங்க வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

மார்ச் 15 ல் பொதுக்குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் கோபால் நன்றி கூறினார்.

Advertisement