கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்
சிக்கல்: சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது தீவிரமாக இயந்திரங்கள் உதவியுடன் நெல் அறுவடை செய்கின்றனர். விவசாயிகள் தங்களது நெல் மூடைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வழங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
சம்பா ரக நெல் ஒரு மூடை 41 கிலோ வீதம் சேமிக்கப்படுகிறது. கிலோ நெல் ரூ.22 ரூபாய் 40 பைசாவிற்கு கடந்த ஆண்டு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விலைக்கு வாங்கினர். அதனுடன் கூடுதலாக மூடை ஒன்றுக்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்தனர். சிக்கலை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது:
சிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.50 வீதம் மூடைக்கு கட்டணம் வசூலித்தனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கட்டணமின்றி விவசாயிகளிடம் மூடைகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கூடுதலாக செலவழித்த விவசாயிகளுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்