கீழக்கரை தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு

கீழக்கரை: கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அலுவலகத்தின் கீழ் தளத்தில் வரவேற்பு அறை அருகே இ --சேவை மையம் செயல்படுகிறது. ரேஷன் ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் முடித்து தனி குடித்தனம் செல்ல உள்ள தம்பதியினர் தங்களுடைய பெற்றோரின் குடும்ப உறுப்பினர் சேர்க்கையில் இருந்து நீக்கல்பெறுகின்றனர்.

இவர்கள் தனி ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் மனு செய்ய சென்றால் கீழக்கரை இ--சேவை மைய ஊழியர்கள் இங்கு பணி செய்ய முடியாது என்றும் வெளியில் உள்ள தனியார் இ--சேவை மையங்களில் சென்று மனு செய்யுங்கள் எனக் கூறுகின்றனர்.

இதனால் கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள 26 வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கீழக்கரையைச் சேர்ந்த மக்கள் டீம் காதர்கூறியதாவது:

கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் ஆன்லைனில் மனு செய்வதற்காக ஏராளமானோர்வருகின்றனர்.

கீழக்கரை நகரில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. ஆட்டோவில் சென்று வர ரூ.150 செலவாகிறது. குதக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்துவருவதற்கு ரூ.500 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வளவு பணம் செலவழித்து சென்றாலும் இ-சேவை மையத்தில் உள்ள ஊழியர்களின் அலட்சிய பதிலால் கால விரையமும், பண விரயமும்ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுடன் வீடு திரும்பிகின்றனர்.

மறுநாள் சென்றால் ஸ்மார்ட் கார்டு ஆன்லைன் மனு இங்கு பதிய வேண்டாம் என வாய்மொழிஉத்தரவு வந்துள்ளதாககூறி திருப்பி அனுப்புகின்றனர்.

ராமநாதபுரம் அரசு கேபிள் தாசில்தாரிடம் புகார் அளித்தால் பொறுப்பற்ற முறையில் பதில் தருவது வேதனையாக உள்ளது.

எனவே மக்களின் நலன் கருதி இ-சேவை மையத்தில் இதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்என்றார்.

Advertisement