தலைமறைவாக இருந்தவர் கைது

திருவாடானை: தொண்டி அருகே கொடிப்பங்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் 65, மருங்கப்பன் 70. இருவருக்கும் முன்விரோதத்தில் ரமேஷ் தாக்கப்பட்டார். ரமேஷ் புகாரில் போலீசார் மருங்கப்பனை கைது செய்தனர். 2017 ல் இச்சம்பவம் நடந்தது.

ஜாமினில் சென்ற மருங்கப்பன் விசாரணைக்கு திருவாடானை கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். ஏழு ஆண்டுகளுக்கு பின் மருங்கப்பனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement