கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மாநில அமைப்பு செயலர் கோரிக்கை
ராமநாதபுரம்: இந்திய அஞ்சல் துறையில் பணிபுரியும் கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு முழு நேர பணி வழங்கி பிற பணியாளர்கள் போலஓய்வூதிய பலன்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என அகிலஇந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சேகர் வலியுறுத்தினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
இந்தியா முழுவதும் 2லட்சத்து 50 ஆயிரம் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணியில் உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள கிளை அஞ்சலகபொறுப்பாளர்களாகவும், தபால் பட்டுவாடாச் செய்யும் ஊழியர்களாகவும் பணி செய்கிறோம். ஒரு நாளைக்கு காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை ஐந்து மணி நேரம் பணிபுரிகிறோம்.
மகளிர் உரிமைத் தொகை, நுாறு நாள் சம்பளம், சேமிப்பு கணக்கு துவக்கம் என அனைத்துபணிகளையும் செய்கிறோம். இதேவேலையைச் செய்யும் அஞ்சல் துறை நிரந்தரப்பணியாளர்களுக்கு எங்களை விடமூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக அளிக்கப்படுகிறது.
எனவே கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8:00 மணி நேரம் பணிவழங்கி நிரந்தரப் பணியாளர்களாகக் கருதி அனைத்துப்பலன்களையும் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் தரவேண்டும். இதனை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். மத்திய அரசுஎங்களது கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.