தைப்பூசத்துக்கு 24 மணி நேரம்  சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தைப்பூசத்திற்கு இன்று முதல் பிப்.,12 வரை சிறப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என காரைக்குடி மண்டல பொது மேலாளர் எஸ்.பி.கந்தசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப்.,8)முதல் பிப்.,12 வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்துார், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களிலிருந்து பழநிக்கு இரவு பகலாக 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Advertisement