உலக சாதனையில் பங்கேற்ற  பள்ளி மாணவருக்கு பாராட்டு

ராமநாதபுரம்: திருச்சியில் நடந்த பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழாவில் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.,28 முதல் பிப்.,2 வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நடந்தது. மலேசியா, சவுதி அரபியா, நேபாளம் ஆகிய வெளிநாடுகள், வெளி மாநில சாரணியர் இயக்கம் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒரே இடத்தில் 20 ஆயிரம் சாரணர்கள் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 வயதிற்குட்பட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 8 மாணவிகள் உட்பட 24 பேர் பங்கேற்றனர்.

வீரதீர செயல்கள், கயிறு ஏறுதல், உணவுத் திருவிழா, உடை கலாச்சாரம், புகைப்பட கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்று பாராட்டு சான்றிதழ் பெற்றனர். இவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு ஆகியோர் பாராட்டினர்.

சாரண, சாரணியர் இயக்க மாவட்டச் செயலாளர் சிவா செல்வராஜ், தலைவர் டாக்டர் அரவிந்த் ராஜ், பயிற்சி ஆணையர்கள் செபஸ்டீன் மகிமைராஜ், லட்சுமிவர்த்தினி, சாரண ஆசிரியர்கள் நாராயணன், தனராஜ், சத்தியசீலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement