ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில திட்டகுழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊட்டசத்து வழங்கப்பட்டது.

நெற்குப்பை சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், திருப்புத்துார் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஆமினா, சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ், முதுநிலை சிகிச்சை மேற் பார்வையாளர் ஜெசிந்தா, சுகாதார பணியாளர் கார்த்திக், முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் காளிராஜ், ஆய்வக நுட்புனர் பவித்ரா பங்கேற்றனர்.

காசநோயால் பாதிக்கப்பட்ட 40 பயனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

Advertisement