சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ஆய்வு
சிவகங்கை: சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து பல்கலை பதிவாளரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சிவகங்கையில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். சிவகங்கை எம்.பி., கார்த்தி, ஜன., 22 ல் சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இக்கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் ஸ்டாலின், இக்கோரிக்கை மனு மீதான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். சிவகங்கையில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து கால்நடை மருத்துவ பல்கலை நிர்வாகம் ஆய்வு நடத்த உள்ளனர். கால்நடை பராமரிப்பு துறை அரசு துணை செயலர் எஸ்.மீனலோச்சனி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ பல்கலை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்
Advertisement
Advertisement