ஆர்ப்பாட்டம்...

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் சி.ஐ.டி.யூ., மற்றும் சிறு வியாபாரிகள் சங்கம் சார்பாக அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார்.வேங்கையன், ஜெயராமன், ஈஸ்வன் மற்றும் சிறு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மடப்புரம் கோயில் நிர்வாகம் சார்பாக கட்டப்பட்ட கடைகளுக்கு பொது ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி நன்றி கூறினார்.

Advertisement